ஆட்டோமொபைல்
ரெனால்ட் மைக்ரோ எஸ்.யு.வி. ரென்டர்

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரம்

Published On 2019-08-24 10:16 GMT   |   Update On 2019-08-24 10:16 GMT
ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், மற்றொரு புதிய எஸ்.யு.வி. மாடலை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் நீளம் 4 மீட்டர்களுக்குள் இருக்கும் என்றும் இது டிரைபர் மாடலின் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மில் உருவாகிறது. ரெனால்ட் ஹெச்.பி.சி. கார் 2020 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

ரெனால்ட் டிரைபர் மாடலும் சி.எம்.எஃப். ஏ பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது க்விட் ஹேட்ச்பேக் மாடலை விட சற்று நீளமாக இருக்கும் என தெரிகிறது. டிரைபர் எம்.பி.வி. மற்றும் ஹெச்.பி.சி. காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் குறைந்த விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய வாகனம் ரெனால்ட் பிராண்டின் விலை குறைந்த எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூன்டாய் வென்யூ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்.பி.சி. காரில் டிரைபர் மாடலில் உள்ளதை போன்ற 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் டிரைபர் மாடலில் ஏழு பேர் அமரக்கூடியதாக இருக்கும் நிலையில், ஹெச்.பி.சி. மாடல் ஐந்து பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. புதிய கார் சற்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் என்றும் இது தற்போதைய டிரெண்டை தழுவி உருவாகியிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News