செய்திகள்
கொரோனா பரிசோதனை

புதிதாக 36,604 பேருக்கு தொற்று: இந்தியாவில் 95 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Published On 2020-12-02 06:11 GMT   |   Update On 2020-12-02 06:11 GMT
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 89.32 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை  40 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 94,99,414 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 501 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,122 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,32,647 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 43,062 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,28,644 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 94.03 சதவீதமாகவும் உள்ளது.
Tags:    

Similar News