உள்ளூர் செய்திகள்
ரசாயன மாம்பழங்கள்

ரசாயன மாம்பழங்கள்

Published On 2022-05-07 08:59 GMT   |   Update On 2022-05-07 08:59 GMT
ராஜபாளையத்தில் ரசாயன மாம்பழங்களை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மாமரங்கள் உள்ளன. 

இந்த ஆண்டு சரியாக விளைச்சல் இல்லாததால் பருவம் தவறிய நிலையில் தாமதமாக மாங்காய்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. 

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜாமுத்து, கதிர்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜபாளையம் ஏ.கே.டி. தினசரி சந்தையில் சோதனையிட வந்தனர். 

அங்குள்ள மாம்பழ குடோனை சோதனையிட்டபோது ரசாயன பொருட்க ளை கண்டறிந்து அதை பயன்படுத்தக் கூடாது என கூறி அந்த மாம்பழங்களை  அதிகாரிகள் பறிமுதல்  செய்ய முயன்றனர்.  இதற்காக வாகனங்களை அதிகாரிகள் தயார் செய்தனர். 

இதற்கு வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் பிடி வாதமாக இருந்ததால் அவர்களை கடைக்குள்ளேயே சிறை வைத்தனர். 

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு காவல் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செய்தனர். 

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை தாக்க முயற்சித்தல் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News