செய்திகள்
சிறப்பு ரெயில்

நெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள்

Published On 2019-10-18 04:41 GMT   |   Update On 2019-10-18 04:41 GMT
நெல்லை- சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
மதுரை:

மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

திருச்சி- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06027) இயக்கப்படுகிறது. இது திருச்சியில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.50 மணிக்கு நாகர்கோவில் செல்லும். இது திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி நெல்லை, வள்ளியூரில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82644) இயக்கப்படுகிறது. இது நாகர்கோவிலில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் செல்லும். இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

இதேபோல தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இது தாம்பரத்தில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு நெல்லை செல்லும்.

நெல்லை- தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82606) இயக்கப்படுகிறது. இது நெல்லையில் இருந்து வருகிற 28-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

நெல்லை- தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06006) இயக்கப்படுகிறது. இது நெல்லையில் இருந்து வருகிற 25-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

தாம்பரம்-நெல்லை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06005) இயக்கப்படுகிறது. இது தாம்பரத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும். இது நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News