செய்திகள்
ஜே.பி.நட்டா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் - ஜே.பி.நட்டா வேண்டுகோள்

Published On 2021-05-22 21:47 GMT   |   Update On 2021-05-22 21:47 GMT
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர். இந்த குழந்தைகளின் நலனுக்காக சிறப்பு திட்டங்களை உருவாக்குமாறு பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா தொற்று நாடு முழுவதும் மிகப்பெரும் காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் முக்கியமாக ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவுக்கு பறிகொடுத்திருக்கின்றனர். அந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த வேண்டியது நமது கடமை. எனவே அதற்காக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை வகுத்து, மத்தியில் பிரதமர் மோடி அரசு பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் வருகிற 30-ந்தேதி அதை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஜே.பி.நட்டா, கொரோனா பரவல் காரணமாக அன்றைய தினம் வேறு கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News