செய்திகள்
சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2019-10-02 17:06 GMT   |   Update On 2019-10-02 17:06 GMT
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த மருத்துவ முகாமினை கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டனர். 

இதில் 34 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும், முகாமில் பரிசோதனை மேற்கொண்ட 6 பெண்களுக்கு கர்ப்பபை வாய் பரிசோதனைக்காகவும், கண் பரிசோதனை மேற்கொண்ட 114 பேரில், 13 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள் அனிதா, உமாமகேஷ்வரி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News