லைஃப்ஸ்டைல்
முப்பருப்பு வடை

சூப்பரான ஸ்நாக்ஸ் முப்பருப்பு வடை

Published On 2019-10-01 08:44 GMT   |   Update On 2019-10-01 08:44 GMT
மாலை நேரத்தில் சூடாக சாப்பிட மூன்று வகையான பருப்புகளை வைத்து எப்படி வடை செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான  பொருட்கள்

உளுத்தம்பருப்பு - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம்பருப்பு -  ஒரு கப்
மிளகு, சீரகம் - சிறிதளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

பருப்பு வகைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிய விட்டு அதனுடன், பெருஞ்சீரகம், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைத்த மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான முப்பருப்பு வடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News