தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோ, ஏர்டெல்

இன்னும் 10 வருடங்களில் நினைக்கமுடியாத லாபம் ஈட்டபோகும் ஜியோ, ஏர்டெல்- எப்படி தெரியுமா?

Published On 2022-02-19 07:06 GMT   |   Update On 2022-02-19 07:06 GMT
பிராட்பேண்டை விட மொபைல் இண்டர்நெட் தான் இந்தியர்கள் அதிகம் பேர் ஆன்லைனில் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் டிஜிட்டல் சூழல் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்கிறது. இதன் மூலம் அடுத்த 10 வருடங்களில் உலகம் முழுவதும் டேட்டா பயன்பாடு 20 மடங்கு வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்றத்தின் மூலம் இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பெரிதாக பயன் அடையும், பல மடங்கு லாபத்தை ஈட்டும் என கிரெடிட் சூசே எனப்படும் சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது இண்டர்நெட்டில் 80 சதவீதம் டிராபிக் வீடியோக்களை நோக்கியே செல்கிறது. மேலும் வருடத்திற்கு 30 சதவீதம் வேகத்தில் இது வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மெட்டாவெர்ஸ் முழு பயன்பாட்டில் வரும் போது மேலும் 37 சதவீத வளர்ச்சி அதிகரிக்கும். இதன்மூலம் அடுத்த 10 வருடங்களில் டேட்டா பயன்பாடு 20 மடங்கு உயரும்.

மெட்டாவெர்ஸ் பயனர்களின் பார்வை நேரத்தையும், பேண்ட்வித் நுகர்வையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.



விரைவில் மெட்டாவெர்ஸ் பயன்பாட்டிற்காக மெய்நிகர் தொழில்நுட்பம், மிகை மெய் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடையும். 5ஜி தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸ் சூழலுக்கு உதவும். ஆனால் 6ஜி தொழில்நுட்பம் தான் மெட்டாவெர்ஸை வளர்ச்சியடைய வைக்கும்.

விரைவில் மெட்டாவெர்ஸின் கேமிங் அதிக அளவில் பிரபலமாகும். இந்தியா கேமிங்கின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், 4ஜி தொழில்நுட்பத்தால் இந்தியர்கள் மொபைல் கேம் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். பிராட்பேண்டை விட மொபைல் இண்டர்நெட் தான் இந்தியர்கள் அதிகம் பேர் ஆன்லைனில் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஆன்லைன் கேம்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்திய மக்கள் அதிகம் இண்டர்நெட்டை செலவிடுவர்.

இதில் மெட்டாவெர்ஸும் வரும்போது இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல்லும், ஜியோவும் தான் மக்களுக்கு மொபைல் இண்டர்நெட் வழங்குவதில் அதிகம் ஈடுபடும். இதனால் அதன் வளர்ச்சியும், லாபமும் நினைக்கமுடியாததாக இருக்கும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News