தொழில்நுட்பம்
ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-01-31 03:45 GMT   |   Update On 2021-01-30 12:19 GMT
ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி வருகிறது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

தற்சமயம் M2101K7AI எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன் இதேபோன்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் அம்சங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மேலும் இந்த மாத துவக்கத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ பிஐஎஸ் சான்று பெற்று இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் M210K6I எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக ரெட்மி நோட் 9 சீரிஸ் இருந்தது. 



இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார், முன்புறம் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News