ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இவி

2020 ஆண்டு அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்

Published On 2021-01-15 10:29 GMT   |   Update On 2021-01-15 10:29 GMT
2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடலாக நெக்சான் இவி காரை 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் 2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.

2020 ஆண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2529 நெக்சான் இவி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் நெக்சான் இவி மட்டும் 63.2 சதவீத பங்குகளை பெற்று உள்ளது. டாடா நெக்சான் இவி மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



கவர்ச்சிகர விலை, சிறந்த செயல்திறன், நீண்ட தூரம் பயணிக்கும் வசதி மற்றும் இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் என பல்வேறு காரணங்களால் இதன் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் துவக்க விலை ரூ. 13.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.
Tags:    

Similar News