செய்திகள்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடுப்புச்சுவர் இல்லாத பாலம் - விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடு்க்க கோரிக்கை

Published On 2021-04-16 14:22 GMT   |   Update On 2021-04-16 14:22 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சர்ச் அருகே ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு பழமையான பாலம் ஒன்று உள்ளது.

இந்த பாலத்தை அகலப்படுத்துவதற்காக பாலத்தின் தடுப்புசுவரின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத்துறையால் அகற்றப்பட்டது

இந்தநிலையில் அகற்றப்பட்ட பாலத்தின் தடுப்புப்பகுதியில் தற்போது கயிறு கட்டி மற்றும் பேரி கார்டுகள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் வழியாக தினமும் கனரக வாகனங்கள் உள்பட எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

இரவுநேரத்தில் பாலத்தின் தடுப்பு பகுதியில் வெறும் கயிறு மட்டும் கட்டப்பட்டு இருப்பதால் தெரியாத வாகன ஓட்டிகள் பாலத்தில் தவறி விழும் சூழ்நிலை நிலவுகிறது.

எனவே பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வற்கு முன்னதாக பாலத்தின் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் அல்லது பாலத்தில் தற்காலிகமாக தடுப்புகளை ஏற்படுத்தி ஒளிரும் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News