செய்திகள்
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி பெரம்பலூர் ஒன்றியத்தில் தொடங்கியது.

பெரம்பலூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

Published On 2020-11-22 09:50 GMT   |   Update On 2020-11-22 09:50 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-21-ம் கல்வியாண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி பெரம்பலூர் ஒன்றியத்தில் தொடங்கியது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-21-ம் கல்வியாண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி பெரம்பலூர் ஒன்றியத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பெரம்பலூர் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உட்பட்ட பகுதிகளான சின்ன தெற்கு தெரு, சன்னதி தெரு, பெரிய தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் பணி, மேற்பார்வையாளர் தேவகி தலைமையில் நடைபெற்றது.

கணக்கெடுப்பு பணிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அனுராதா செய்திருந்தார். இந்த பணியானது அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News