ஆட்டோமொபைல்

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 முன்பதிவு துவங்கியது

Published On 2019-01-10 12:52 GMT   |   Update On 2019-01-10 12:52 GMT
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #MahindraXUV300



மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.

எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
Tags:    

Similar News