செய்திகள்
சுனில் கவாஸ்கருடன் டிரம்ப்

குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்பை சந்தித்த கவாஸ்கர்

Published On 2019-08-24 08:17 GMT   |   Update On 2019-08-24 08:17 GMT
குழந்தைகளுக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி, நிதி திரட்டுவதற்காக அமெரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துள்ளார்.
வாஷிங்டன்:

மும்பையின் புறநகரான நவி மும்பையில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி  குழந்தைகளுக்கான சர்வேதச மருத்துவ மையம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசுகையில்,  ‘பச்சிளங்குழந்தைகளின் இதயங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை தீர்க்க காத்திருக்கிறேன். ஒவ்வொரு பச்சிளங்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ள இதய நோய் தொடர்பான நோய்க்கான சிகிச்சை கிடைப்பதை சமூக அந்தஸ்து பேதமில்லாமல் உறுதி செய்ய வேண்டும்.



ஸ்ரீ சத்திய சாய் மருத்துவமனை அதை வழங்கும் என்று நம்புகிறேன் என்னால் முடிந்த அளவு 34 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ இருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சுனில் கவாஸ்கர் குழந்தைகளுக்கான இலவச இதய மாற்ற அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் நியூயார்க் சென்றுள்ளார். அந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துள்ளார்.

கவாஸ்கர் இதுபோன்று நியூ ஜெர்சி, அட்லாண்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் 230 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு அவர் நிதி திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News