செய்திகள்
டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பாதிப்பு - திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2019-09-20 10:39 GMT   |   Update On 2019-09-20 10:39 GMT
திருவாரூர் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 36 பேர் அனுமதிக்கப்பட்டு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 சிறுவர்கள் உள்ளனர்.

இவர்களில் திருவாரூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (வயது 20), மேல திருமதி குன்னம் சேர்ந்த முருகேசன் (28) ஆகிய 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சால் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News