செய்திகள்
அக்னி-5 ஏவுகணை

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

Published On 2021-10-27 18:15 GMT   |   Update On 2021-10-27 18:22 GMT
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.  

நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News