செய்திகள்
அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

Published On 2021-01-22 04:54 GMT   |   Update On 2021-01-22 04:54 GMT
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.58 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

கூட்டத்திற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், முக்கியமாக ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக விரைவில் மாற்றி திறப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலா குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News