தொழில்நுட்பம்
ரியல்மி

இணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்

Published On 2020-04-16 06:51 GMT   |   Update On 2020-04-16 06:51 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விவரங்கள் ப்ளூடூத் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.



ஸ்மார்ட்போன் சந்தையை தொடர்ந்து ஃபிட்னஸ் சந்தையில் களமிறங்கிய ரியல்மி பிராண்டு, தற்சமயம் டிவி சந்தையிலும் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் ரியல்மி பிராண்டின் இரண்டு புதிய எல்இடி டிவி மாடல்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன் ரியல்மி ஸ்மார்ட் டிவி ரிமோட் கண்ட்ரோல் ப்ளூடூத் சான்று பெற்றதாக தகவல் வெளியானது. ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருந்தார். கடந்த மாதம் ரியல்மி பிராண்டு தனது முதல் ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்திருந்தது.  

தற்சமயம் ப்ளூடூத் எஸ்ஐஜி தளத்தில் வெளிாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி பிராண்டு தனது ஸ்மார்ட் டிவிக்களை 43 இன்ச் மற்றும் 32 இன்ச் என இரண்டு அளவுகளில் வெளியிடும் என தெரியவந்துள்ளது. மேலும் இரு டிவி மாடல்களிலும் ப்ளூடூத் 5 வசதி வழங்கப்படும் என தெரிகிறது.



முன்னதாக ரியல்மி 43 இன்ச் எல்இடி டிவி மாடல் இந்திய தரத்தை உறுதிப்படுத்தும் வலைதளத்தின் மூலம் வெளியாகி இருந்தது. இரு மாடல்கள் தவிர ரியல்மி பிராண்டு 55 இன்ச் அளவிலும் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இது தள்ளிவைக்கப்பட்டது.

ரியல்மி டிவி சீரிஸ் சிறப்பம்சங்கள் அறியப்படவில்லை என்றாலும், இவற்றில் அல்ட்ரா ஹெச்டி மாடல்கள் ஹெச்டிஆர் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.  இத்துடன் இவை கஸ்டரம் யூசர் இன்டர்பேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News