செய்திகள்
ஆனேக்கல்லில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பணத்தை படத்தில் காணலாம்.

கர்நாடக மாநிலத்தில் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி நகை, பணம் பறிமுதல் - 56 பேர் கைது

Published On 2021-07-17 14:08 GMT   |   Update On 2021-07-17 14:08 GMT
கர்நாடக மாநிலத்தில் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:

தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு ரூரல் மாவட்டத்திற்குட்பட்டது ஆனேக்கல் தாலுகா. இந்த தாலுகாவில், சர்ஜாபுரா, சூர்யா நகர், அத்திப்பள்ளி, பன்னேர்கட்டா உள்ளிட்ட பகுதிகளில் 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

இந்த போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி என 37 வழக்குகள் பதிவாகின. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 56 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 இரு சக்கர வாகனங்கள், தங்க நகைகள், பணம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சம் ஆகும்.

குற்றவாளிகளை கைது செய்து, நகைகள், பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை கர்நாடக மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News