செய்திகள்
முககவசம்

இருசக்கர வாகனங்களில் முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு

Published On 2020-10-10 07:57 GMT   |   Update On 2020-10-10 07:57 GMT
பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் நகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் முககவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுரை படி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் நகர் பகுதிகளில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களில் முககவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினர்.

முககவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கி, கைகளில் கிருமிநாசினி தெளித்தனர். முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் முககவசம் அணியாமல் வந்த சிலருக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்து 500-க்கும் மேற்பட்ட முககவசங்களை இலவசமாக வழங்கினர். இதில் பரமத்திவேலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News