செய்திகள்
கோப்புபடம்

அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

Published On 2021-10-13 09:56 GMT   |   Update On 2021-10-13 09:56 GMT
கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி நடைபெற உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ‘விண்வெளித் துறையில் ஏவுகணை நாயகன்’ என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எனது பார்வையில் கலாமின் கட்டளைகள்’ என்ற தலைப்பிலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அக்னி சிறகுகள் ஒரு பார்வை’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு ‘அப்துல்கலாம் விரும்பிய கனவு இந்தியா’ என்ற தலைப்பிலும் இணைய வழியில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. 

கட்டுரைகளை வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது கண்ண பிரான், ஒருங்கிணைப்பாளர் , ஆ-7, வித்யாசாகர் வீதி, காந்தி நகர் அஞ்சல், உடுமலை வட்டம், திருப்பூர்  மாவட்டம் - 642154 என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 8778201926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News