ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

26-ந்தேதி சூரிய கிரகணம்: தாணுமாலயசாமி கோவிலில் 8 மணி நேரம் நடை அடைப்பு

Published On 2019-12-24 05:20 GMT   |   Update On 2019-12-24 05:20 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில், 26-ந்தேதி சூரிய கிரகணத்தையொட்டி 8 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால், அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி சூரியகிரகணம் ஆகும். தமிழ்நாட்டில் காலை 8 மணி முதல் 11.16 மணி வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு கொன்றையடி சன்னதியில் அபிஷேகமும், அதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலய சாமிக்கு அபிஷேகமும், பூஜைகளும் செய்யப்பட்டு கோவில் நடை காலை 8 மணிக்கு அடைக்கப்படுகிறது. சூரியகிரகணத்தையொட்டி கோவில் நடை 8 மணி நேரத்துக்கு பிறகு மாலை 4 மணிக்கு திறந்து பரிகார பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News