உள்ளூர் செய்திகள்
காசிமேடு மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை 2 மடங்கு உயர்வு

Published On 2022-04-17 06:48 GMT   |   Update On 2022-04-17 06:48 GMT
மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
ராயபுரம்:

ஞாயிற்றுக்கிழமை என்றாலே வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் காசிமேட்டில் மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவர்.

விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் அங்கேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அனைத்து வகையான மீன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மீன் பிரியர்கள் காசிமேட்டில் குவிவார்கள்.

இதனால் காசிமேடு மீன் சந்தைகளில் வார விடுமுறை தினத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்படும்

கடந்த 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61நாட்கள் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை ஏற்கனவே சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை பதப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்று மீன்பிடி தடை காலம் தொடங்கி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் விரத நாட்கள் முடிந்து இன்று பொதுமக்கள் மீன்களை வாங்க ஆர்வமுடன் காசிமேட்டில் குவிந்தினர்.காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை வஞ்சிரம் ஏற்கனவே 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது

பெரிய வகை வஞ்சிரம் 1300 ரூபாயில் இருந்து 1,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சங்கரா 400 ரூபாயில் இருந்து 650 ரூபாய், நெத்திலி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 700 ரூபாய், வவ்வால் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1200 ரூபாய் கடம்பா 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 800 ரூபாய், இறால் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 650, ரூபாய் பாறை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 1000 ரூபாய், நண்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 650 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. கொடுவா 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

கிழங்கா 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News