செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா?: மாநகராட்சி ஆணையர் பதில்

Published On 2020-07-22 08:14 GMT   |   Update On 2020-07-22 08:14 GMT
ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்ற கேள்விக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதிலளித்துள்ளார்.
சென்னை:

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக நேற்று முன்தினம் மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.

கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வுக்காக சென்றுள்ளார். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்ற கேள்விக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில் கூறியுள்ளார்.



அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார்.

மேலும், சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் 5 லட்சம் பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News