லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலி

கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது?

Published On 2021-10-22 07:29 GMT   |   Update On 2021-10-22 07:29 GMT
எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.
கருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பது, ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவது காரணமாக கர்ப்பிணி பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள்.

கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.

கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.

கர்ப்பகாலத்தில் பெண்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளாலும் இடுப்பு வலி உண்டாகிறது. இவை தவிர நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்துகொண்டே இருப்பது, எப்போதும் சரியான போஸில் இல்லாமல் படுத்துகொண்டே இருப்பது போன்றவையும் இடுப்பு வலியை அதிகரித்துவிடுகிறது

இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் தசை நார் வலி பிரச்சினையை அனுபவிப்பார்கள். எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
Tags:    

Similar News