ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் குங்கும லட்சார்ச்சனை

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் குங்கும லட்சார்ச்சனை

Published On 2021-11-30 08:09 GMT   |   Update On 2021-11-30 08:09 GMT
கோவிலில் நடந்த குங்கும லட்சார்ச்சனையை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் 413 வீடுகளை சேர்ந்த பக்தர்கள் டெலிவிஷனில் பார்த்து தரிசனம் செய்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை அலங்கரித்து வைத்து ேநற்று காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிரதான அர்ச்சகர்கள் பத்மாவதி தாயாருக்கு லட்சுமி அஷ்டோத்தரம் மற்றும் லட்சுமி சஹஸ்ர நாமங்களை ஓதி குங்கும லட்சார்ச்சனையை நடத்தினர்.

கோவிலில் நடந்த குங்கும லட்சார்ச்சனையை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் 413 வீடுகளை சேர்ந்த பக்தர்கள் டெலிவிஷனில் பார்த்து தரிசனம் செய்தனர்.

அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா பங்கேற்று தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு குங்கும லட்சார்ச்சனை நடப்பது வழக்கம். பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடத்த குங்கும லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. கும்குமம் இந்துக்களின் மங்கல பொருள். வீடு, கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணமான பெண்கள் தங்களின் ெநற்றியிலும், மாங்கல்யத்துக்கும் குங்குமம் வைப்பார்கள், என்றார்.
Tags:    

Similar News