உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ரூ.1கோடியே 4லட்சத்து 14ஆயிரம் - திருப்பூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் இலக்கு

Published On 2021-12-09 06:43 GMT   |   Update On 2021-12-09 06:43 GMT
கொடிநாள் வசூல் செய்த அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார்.
திருப்பூர்:

முப்படை வீரர்களின் தேசப்பற்றை பாராட்டியும் அவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் படைவீரர் கொடிநாள் டிசம்பர் 7-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. நாட்டையும், மக்களையும் காப்பாற்றிய படை வீரர்களையும், அவர்களது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் நிதி வசூலை, கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். 

கொடிநாள் விழாவில் முப்படை வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் விளக்கினார். கொடிநாள் வசூல் செய்த அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார். நடப்பு ஆண்டில் ஒரு கோடியே 4 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இலக்காக  ரூ.10.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் (பொறுப்பு ) சந்திரசேகர், முப்படை வாரிய உப தலைவர் ராமகிருஷ்ணன் (ஓய்வு), முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த ஆண்டில் மாவட்டத்தின் கொடிநாள் வசூலாக ரூ. 86.78 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 136.6 சதவீதம் அளவான  ஒரு கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 258 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News