செய்திகள்
கோப்புபடம்

கள்ளக்காதலியை விட்டு கொடுக்குமாறு கூறியதால் கழுத்தை அறுத்து கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்

Published On 2021-09-18 08:44 GMT   |   Update On 2021-09-18 08:44 GMT
சேலத்தில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கிருபைராஜ் (வயது 23). நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகேசன் என்பவரின் மனைவி கலைமணியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதற்கிடையே கிருபைராஜின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கலையரசன் என்பவரும் கலைமணியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றார். இதில் கலைமணியுடன், கலையரசனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனால் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் நேற்று கிருபைராஜீம், கலைமணியும் காந்தாஸ்ரமம் பின்புறம் உள்ள கரட்டிற்கு சென்றனர். அங்கிருந்து கிருபைராஜ், கலையரசனை செல்போனில் தொடர்பு கொண்டு கலைமணியை நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன், இனி அவளை தொந்தரவு செய்யாதே என்று கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலையரசன் உடனே அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்தார். அப்போது கலைமணி எனக்கு வேண்டும் என்று கூறி கலையரசன், கிருபைராஜீடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த கலையரசன், கிருபைராஜை கத்தியால் சரமாரியாக குத்தினார். மேலும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கலையரசன் தப்பி ஓடினார். இதனை பார்த்த கலைமணியும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிருபைராஜின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த கலையரசனை கைது செய்தனர்.

அப்போது கலையரசன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனது நண்பரான கிருபைராஜீடன், கலைமணி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது கலைமணியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. தற்போது கர்ப்பிணியாக இருக்கும் கலைமணி கணவரை விவாகரத்து செய்து விட்டு கிருபைராஜை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்கு ஒத்துழைக்கும் படியும், இனிமேல் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் என்னிடம் கிருபைராஜ் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கிருபைராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

அதன்படி நேற்று காந்தாஸ்ரமம் பகுதியில் 2 பேரும் இருப்பதை அறிந்த நான் அங்கு சென்றேன், அப்போது கலைமணியை விட்டு ஒதுங்கி செல்லுமாறு கிருபைராஜ் மீண்டும் என்னிடம் கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த நான் கிருபை ராஜை சரமாரியாக கத்தியால் குத்தினேன், மேலும் ஆத்திரம் தீராததால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினேன். ஆனாலும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். போலீசார் கலையரசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.

Tags:    

Similar News