ஆன்மிகம்
இறைவழிபாடு

பஞ்சோபசாரம் என்றால் என்ன?

Published On 2019-12-19 05:56 GMT   |   Update On 2019-12-19 05:56 GMT
மனித வாழ்விற்கு அடிப்படையாக விளங்கும், பஞ்ச பூதங்களையும் வழங்கிய இறைவனுக்கு, நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் ஐந்து விதமான செயல்களை செய்வார்கள். அதற்கு ‘பஞ்சோபசாரம்’ என்று பெயர்.
மனித வாழ்விற்கு அடிப்படையாக விளங்கும், ‘நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வழங்கிய இறைவனுக்கு, நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் ஐந்து விதமான செயல்களை செய்வார்கள். அதற்கு ‘பஞ்சோபசாரம்’ என்று பெயர்.

பிருத்வி தத்துவம் (நிலம்) - சுவாமி சிலை அல்லது படத்துக்கு சந்தனம் இடுதல்

ஆகாய தத்துவம் - பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது, அழகுபடுத்துவது.

வாயு தத்துவம் - குங்குலியம் (சாம்பிராணி), ஊதுபத்தி போன்றவற்றைக் கொண்டு தூபம் போடுவது.

அக்னி தத்துவம் - கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றி ஆராதனை செய்வது.

நீர் தத்துவம் - இறைவனுக்கு உகந்த உணவு (நைவேத்தியம்) படைத்தல்
Tags:    

Similar News