செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சைக்கிள் பேரணி தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

Published On 2018-04-06 04:50 GMT   |   Update On 2018-04-06 04:50 GMT
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தலைமைச் செயலகம் நோக்கி சைக்கிள் பேரணி தொடங்கினார். #ChandrababuNaidu #cyclerally
அமராவதி:

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவே, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் மத்திய அரசில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது.  

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்து வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சைக்கிள் பேரணியை தொடங்கினார்.

தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்.டி.ராமா ராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், வேங்கடபாலம் கிராமத்தில் இருந்து சைக்கிள் பேரணியை தொடங்கிய சந்திரபாபு நாயுடு, தலைமைச் செயலகத்தில் பேரணியை நிறைவு செய்ய உள்ளார். பேரணியில் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேரணியின்போது, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது தேசிய ஜனநாயக கூட்டணி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளார். #ChandrababuNaidu #cyclerally

Tags:    

Similar News