செய்திகள்
தற்கொலை முயற்சி

அதிக மாத்திரை சாப்பிட்டு அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

Published On 2021-02-28 09:45 GMT   |   Update On 2021-02-28 09:45 GMT
பணிக்கு வரச்சொல்லி மிரட்டியதால் அதிக மாத்திரை சாப்பிட்டு அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்டம் எஸ். வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவர் கரூர் மாவட்டம் புலியூர் அருகேயுள்ள குளத்துப்பாளையம் அங்கன்வாடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமான காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சந்தியா, மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன், தனது நிலையை வாட்ஸ்அப்பில் வீடியோவாக பதிவிட்டு, சக ஊழியர்களுக்க அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவில், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வணக்கம். குளத்துப்பாளையம் சந்தியா பேசுகிறேன். என்னை ஆபிசுக்கு ரிக்கார்டு எழுத வரச்சொன்னார்கள். என்னால் முடியவில்லை மேடம், உட்கார்ந்து எழுத முடியாது என்று சொன்னேன். உடனே அவர்கள் ஏரியாவுக்கு சிலரை அனுப்பி சர்வே எடுக்க சொல்லி என்னை அசிங்கப்படுத்திவிட்டனர்.

ஆபீசுக்கு வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை எனவும் மிரட்டுகின்றனர். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு. நீங்க யாருமே கேட்க மாட்டீங்களா? சொல்லுங்க. எனக்கு உடம்புக்கு முடியவில்லை ஆபீசுக்கு வரமுடியவில்லைன்னு சொன்னேன். இது தப்பா? என் சாவுக்கு காரணம் அந்த அதிகாரிகள் தான், நீங்க மன்னிச்சுடுங்க எனக்கூறியவாறு காய்ச்சல் மாத்திரைகளை உட்கொண்டு, தண்ணீரை குடித்து விட்டு மயங்கியுள்ளார்.

இந்த வாட்ஸ்அப் நிகழ்வு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News