ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 30-ந் தேதி தொடங்குகிறது

Published On 2021-10-30 06:53 GMT   |   Update On 2021-10-30 06:53 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நவம்பர் மாதம் 29-ந் தேதி காலை லட்சங்குன் குமார்ச்சனையும், மாலையில் அங்குரார்ப்பணமும் நடைபெறுகிறது.

தொடர்ந்து 30-ந் தேதி காலையில் கொடியேற்றமும், இரவில் சிறிய வாகன சேவையும் நடக்கிறது. டிசம்பர் மாதம் 1-ந் தேதி பெரிய வாகனம், 2-ந் தேதி சிம்ம வாகனம், 3-ந் தேதி கல்ப விருட்ஷ வாகனம், அனுமன் வாகனம், 4-ந் தேதி பல்லக்கு உற்சவம், வசந்தோற்சவம் மற்றும் கஜ வாகனம் நடக்கிறது.

5-ந் தேதி காலை சர்வ சக்திகளின் வாகனம், மாலையில் தங்கத் தேர், இரவில் கருட வாகனம், 6-ந் தேதி சூரிய ஒளி வாகனம், நிலவொளி வாகனம், 7-ந் தேதி தேர் திருவிழா, சர்வபூபால வாகனம், குதிரை வாகனம், 8-ந் தேதி பஞ்சமிதீர்த்தம், கொடி இறங்குதல் நடக்கிறது.
Tags:    

Similar News