செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 1693 பேர் பாதிப்பு

Published On 2021-09-16 14:03 GMT   |   Update On 2021-09-16 14:03 GMT
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,88,334 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,658 ஆக பதிவான நிலையில் இன்று 1,693 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,693  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,40,361 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேர் (அரசு மருத்துவமனை 17, தனியார் மருத்துவமனை - 8) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,271 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,548 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,88,334  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 16,756 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,53,721 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை - 206, சென்னை - 202, செங்கல்பட்டு - 135, ஈரோடு - 134, திருப்பூர் - 110, தஞ்சாவூர் - 108, 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News