ஆன்மிகம்
சாமிதோப்பு

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2021-08-18 06:57 GMT   |   Update On 2021-08-18 06:57 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தமிழக அரசின் வழிகாட்டுதல்படி நாளை மறுநாள் தொடங்குவதாக பால. ஜனாதிபதி கூறினார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, தை மற்றும் ஆவணி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா குறித்து அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் பால. ஜனாதிபதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாமிதோப்பில் ஆவணி திருவிழா பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 20-ந் தேதி அதிகாலையில் முத்திரி பதமிட்டு திருநடை திறத்தல், பணிவிடை, கொடி பட்டம் தயாரித்தல், கொடிப்பட்டம் வலம் வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெறும். தொடர்ந்து 11 நாட்கள் விழா நடைபெறும்.

இதில் கலிவேட்டை, பணிவிடை, உச்சப்படிப்பு தேரோட்டம் போன்றவை நடக்கிறது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் தலைமைப்பதி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைச் செயலாளர் ராஜன், கூடுதல் பொதுச்செயலாளர் கிருஷ்ணமணி மற்றும் சுயம்புராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News