உள்ளூர் செய்திகள்
நவீன கருவி

நாகர்கோவிலில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சை

Published On 2022-05-06 08:05 GMT   |   Update On 2022-05-06 08:05 GMT
நாகர்கோவிலில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சை உயர் தொழில் நுட்பத்துடன் அளிக்கப்படுகிறது
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ள பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சூப்பிரண்டு ஜார்ஜ், இருதய சிகிச்சை பிரிவு டாக்டர் வெங்கடேஷ், இன்டர்வென்ஷன் ரேடி யாலஜி டாக்டர் நரசிம்மன் ஆகியோர்  நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகர்கோவில் பார்வதி புரம் அருகே உள்ள களியங்காடு பகுதியில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 மாடி கட்டிடத்துடன் 250 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைந்துள்ளது. 

இங்கு கேன்சர் சிகிச்சை பிரிவு, குடல் சிகிச்சை பிரிவு, காச நோய் சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, இருதயம் சம்பந்தமான பிரச்சினை, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவம் உள்பட அனைத்து சிகிச்சை பிரிவுகளும் செயல்படுகின்றன. 

இந்த மருத்துவமனை கடந்த பிப்ரவரி 14ம் தேதி செயல்பட தொடங்கியது. ஏப்ரல் மாதத்திலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மருத்துவமனையில் 23 அறுவை சிகிச்சைகளும் 15 நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.  1½  வயது குழந்தைக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

மெட்ரோ சிட்டியில் செயல்பட்டு வரும் இன்டர்வென்ஷன் ரேடியாலஜி (நுண்துளை ஊடுருவல் சிகிச்சை) மதுரைக்கு தென் பகுதியில் இந்த மருத்துவமனையில் மட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் தலை முதல் கால் வரை உள்ள நரம்புகளில் ஏற்படும் ரத்த அடைப்பு மற்றும் ரத்த கசிவு, கொழுப்பு கட்டிகள் போன்றவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யலாம். 

மேலும் கேன்சர் கட்டிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக பக்கவாத நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்ட 4½ மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் ஊசி மூலம் மருந்து செலுத்தி சரிசெய்யலாம். 24 மணிநேரத்திற்குள் வந்தால் தொடை வழியாக நுண்துளை ஊடுருவல் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தின் போது ஏற்படும் ரத்தக்கசிவு நிறுத்துவதற்கான சிகிச்சை இந்த நுண் துளை ஊடுருவல் செய்யப்படுகிறது.

இதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருதய அடைப்பு அதில் ஏற்படும் ஓட்டை ஆகியவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் தொடை வழியாக பலூன் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அதேபோல் இருதயத்தில் ஏற்படும் வால்வு சுருக்கம் சரி செய்யப் படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.

இருதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை பிரான்ஸ்பிரட்(மாற்று சிகிச்சை) செய்யும் வசதியும் இந்த மருத்துவமனையில் உள்ளது. இங்கு சிடி ஸ்கேன் வசதியும் உள்ளது.  எம்ஆர்ஐ விரைவில் அமைக்கப்பட உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வெண்டிலேஷன் பெறும் நோயாளிகளுக்கு அடுத்த கட்டமாக எக்மோ. சிகிச்சை வழங்கும் வசதியும் உள்ளது.  

இங்கு சிகிச்சை பெற வருபவர்கள் உயர் சிகிச்சைக்கான வெளியே செல்ல தேவையில்லை. மருத்துவத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News