ஆன்மிகம்
சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

மாசி மக திருவிழாவில் சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

Published On 2021-02-27 06:05 GMT   |   Update On 2021-02-27 06:05 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி மக திருவிழாவில் சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். திருவிழாவில் கடந்த ஜனவரி மாதம் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்தில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் சாமிகள் தினமும் சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

இந்தநிலையில் பெரிய சாமி வீதி உலா கடந்த 18-ந் தேதி முதல் தொடங்கியது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் 8 இடங்களில் சுற்று கொடியேற்றம் நடந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் நேற்று சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர். இன்று (சனிக்்கிழமை) மாசி மகம் தினத்தன்று மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் கோவில் இருந்த கிளம்பி சித்திரை வீதி வழியாக, கீழமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி வழியாக சிம்மக்கல் வைகை ஆற்றின் தென்கரை திருமலைராயர் படித்துறை பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தளுவார்கள்.

அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News