செய்திகள்
வழக்குப்பதிவு

ஊரடங்கை மீறிய 205 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-18 10:17 GMT   |   Update On 2021-06-18 10:17 GMT
ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் சுமார் 34 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில தளர்வுகளுடன் வருகிற 20-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், முககவசம் அணியாமல் வெளியே வந்த சுமார் 127 பேர் மீது வழக்குப்பதிந்து, அபராத தொகையாக ரூ.30 ஆயிரம், பொது இடங்கள் மற்றும் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக சுமார் 20 பேர் மீது வழக்குப்பதிந்து, அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் சுமார் 34 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 20 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 205 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News