செய்திகள்
பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி

மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் நீடிப்பு

Published On 2021-11-15 07:35 GMT   |   Update On 2021-11-15 07:35 GMT
இன்று பணிமனை தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்பியபோதும், அனைத்து டெப்போக்களும் மூடப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் நஷ்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆராய்வதற்காக ஒரு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசின் கோரிக்கையை ஏற்று நேற்று கிட்டத்தட்ட 4000 தொழிலாளர்கள் பணிக்கு வந்த நிலையில் சுமார் 80 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இன்று பணிமனை தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்பியபோதும், அனைத்து டெப்போக்களும்  (250 டெப்போக்கள்) மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதேபோல் கடந்த வாரமும் அனைத்து டெப்போக்களும் மூடப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதன்பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டது. அதனை ஏற்று குறிப்பிட்ட சிலர் பணிக்கு திரும்பினர். பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News