செய்திகள்
உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ளதை படத்தில் காணலாம்.

விவசாயிகளுக்கு வேளாண் பல்கலை-காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தல்

Published On 2021-05-24 06:55 GMT   |   Update On 2021-05-24 06:55 GMT
மழைக்காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளுக்கு சில வழிகாட்டு முறைகளை கோவை வேளாண் பல்கலை கழகம்-வேளாண் காலநிலை ஆராய்ச்சிமையம் அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை சீசனில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை வேளாண் பல்கலை கழகம் மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வழிகாட்டுதல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி நடப்பு மழை சீசனையொட்டி விளைநிலங்களில் கோடை உழவு செய்வதால் பூச்சி நோய் மற்றும் களையை கட்டுப்படுத்துவதுடன் நிலத்தில் அதிகளவு நீர் சேமிக்கப்படும். 

இறவை சோளம் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்துவது அவசியமாகும். மழையுடன் காற்றின் வேகம் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால், கரும்பு பயிர் சாயாமல் இருக்க தோகை உரிக்க வேண்டும். 

தென்னை மரத்தின் பாத்திகளை களை கொத்து கொண்டு கிளறி விடுவதால் மழை நீரை சேகரிக்கலாம். புதிதாக முளைத்துள்ள புற்களில் கால்நடைகளை மேயவிடாமல் இருந்தால், பாக்டீரியா வகை நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். 

கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கொட்டகையில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்வதால் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News