செய்திகள்
பாஜக

பஞ்சாப் பாஜக எம்எல்ஏக்கள் இப்படி செய்ததாக கூறி வைரலாகும் தகவல்

Published On 2021-03-17 04:59 GMT   |   Update On 2021-03-17 04:59 GMT
பஞ்சாப் மாநில பாஜக எம்எல்ஏக்கள் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடுமுழுக்க விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பஞ்சாப் மாநில விவசாயிகள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்த மூன்று பாஜக எம்எல்ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தற்போது பஞ்சாப் பாஜக இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது தவறான தகவல் என தெரியவந்துள்ளது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கட்சி மாறவில்லை என தெரிவித்து இருக்கின்றனர். மேலும் பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தால், அதுபற்றிய செய்திகள் வெளியாகி இருக்கும். இவ்வாறு எந்த தகவலும் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. 

அந்த வகையில் பஞ்சாப் மாநில பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை என்பதும், பஞ்சாப் பாஜக இல்லாத மாநிலமாக மாறவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News