ஆன்மிகம்
ஜெகன்நாத பெருமாள் கோவிலில் சாமி வீதிஉலா புறப்பாடு

ஜெகன்நாத பெருமாள் கோவிலில் சாமி வீதிஉலா புறப்பாடு

Published On 2021-02-09 04:47 GMT   |   Update On 2021-02-09 04:47 GMT
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் அத்யயன உற்சவத்தையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ராப்பத்து, பகல் பத்து உற்சவம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறவில்லை. இதற்கு அத்யயன உற்சவம் செய்து சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது.

அத்யயன உற்சவத்தையொட்டி முதல் நாள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. 2-வது நாள் உற்சவர் பெருமாள் தாயார் லெக்ஷ்மிநாராயண மூர்த்தி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது. பின்னர் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் திருவடி தொழுதல், சாற்றுமுறை, திவ்யபிரபந்தம் பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானமாமலை ஜீயர் சுவாமிகள் மட நிர்வாகி கிருஷ்ணன் சுவாமி, ஜெகன்நாத கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News