செய்திகள்
திருப்பூர் வடக்கு ஆர்.டி,ஓ. அலுவலகம்.

மீண்டும் பரபரப்பான ஆர்.டி.ஓ.,அலுவலகங்கள்

Published On 2021-07-14 09:49 GMT   |   Update On 2021-07-14 09:49 GMT
40 பேருக்கு எல்.எல்.ஆர்.,40 பேருக்கு லைசன்ஸ், 40 பேருக்கு புதுப்பித்தல் என 120 விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
 
ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டதால் ஜூன் இரண்டாவது வாரம் வட்டார போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ.,) அலுவலகங்கள் செயல்பட  தொடங்கின.

நாள் ஒன்றுக்கு விண்ணப்பங்கள் எண்ணிக்கையாக லைசன்ஸ், எல்.எல்.ஆர்., புதுப்பித்தல் சேர்த்து 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் வருகை அதிகம் உள்ளதால், அவை 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

40 பேருக்கு எல்.எல்.ஆர்., (பழகுனர் உரிமம்), 40 பேருக்கு லைசன்ஸ், 40 பேருக்கு புதுப்பித்தல் என 120 விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருப்பூர் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும்  விண்ணப்பங்கள் பெறப்பட்டு லைசென்ஸ்  உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதனால்  திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது.  
Tags:    

Similar News