செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் அரசு வழக்கு

Published On 2020-03-16 13:06 GMT   |   Update On 2020-03-16 13:06 GMT
மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறுவதாக சுட்டிக்காட்டி ராஜஸ்தான் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்திலும் இதுபோன்றதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இரண்டாவதாக, மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறுவதாக சுட்டிக்காட்டி ராஜஸ்தான் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதவிர, காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News