செய்திகள்
பறிமுதல் வாகனங்கள்

பறிமுதல் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க காவல்துறை முடிவு

Published On 2021-07-21 11:24 GMT   |   Update On 2021-07-21 11:24 GMT
நீண்ட நாட்களாக அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுவதால் அவை பழுதடைந்து துருப்பிடித்து விடுகின்றன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், உரிய ஆவணங்களின்றி இயங்கும் வாகனங்கள்,விபத்தில் சிக்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வாகனங்கள் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. 

நீண்ட நாட்களாக அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுவதால்  அவை பழுதடைந்து துருப்பிடித்து விடுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்களை மட்டும் பாதுகாப்பாக வைக்கவும், மற்ற வாகனங்களை கணக்கெடுத்து உரிமையாளரிடம் அபராதம் வசூலித்து திரும்ப ஒப்படைக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் ஷாய் உத்தரவிட்டார்.  

அதன் பேரில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. உரிய முறையில் கணக்கெடுத்து நீதிமன்ற வாகனங்களைத்தவிர மற்ற வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News