உள்ளூர் செய்திகள்
ஷூக்களை திருடும் நூதன கொள்ளையன்

ஷூக்களை திருடும் நூதன கொள்ளையன்- பல்லாவரம் சந்தையில் புதுப்பித்து விற்பனை

Published On 2022-05-06 09:02 GMT   |   Update On 2022-05-06 09:02 GMT
திருடும் ஷூக்களை கொள்ளையன், பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

சென்னை வேளச்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து ஷூக்களை மட்டும் திருடும் நூதன கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளான்.

நேற்று இரவு வேளச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சாக்கு பையுடன் சென்ற கொள்ளையனின் உருவம் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. மாடிப்பகுதியில் ஏறும் கொள்ளையன் நாய் குரைத்ததும் மெதுவாக கீழே இறங்கி செல்கிறான். இந்த கொள்ளையன் பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பழைய ஷூக்களை புதுப்பித்து புது ஷூக்கள் என அவன் விற்பனை செய்தது தெரியவந்தது. பல்லாவரம் வார சந்தையில் இதுபோன்று ஷூக்களை அவன் விற்பனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News