தொழில்நுட்பம்
அமேசான்

முன்னணி ஆன்லைன் தளங்களின் அதிரடி விற்பனை அறிவிப்பு

Published On 2020-10-02 03:45 GMT   |   Update On 2020-10-01 18:05 GMT
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் ஆன்லைன் தளங்களின் அதிரடி விற்பனை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் அக்டோபர் 14 ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே தினத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. 

அந்த வகையில், இதே தினத்தில் சிறப்பு விற்பனையும் துவங்கும் என கூறப்படுகிறது. சிறப்பு விற்பனையில் மொபைல் போன் மற்றும் இதர மின்சாதனங்கள், பல்வேறு இதர பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.



ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவைகளை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

சிறப்பு விற்பனைக்காக ப்ளிப்கார்ட் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுதவிர மொபைல் போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் விசேஷ விலை குறைப்பு வழங்கப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கென பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் வெளியிட்டு உள்ளது.

இத்துடன் சிறப்பு விற்பனையில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தொலைகாட்சி மற்றும் பெரிய சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை மற்றும் கூடுதல் வாரண்டி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News