இந்தியா
கோப்புப்படம்

பக்தர்கள் மாரடைப்பால் இறப்பதை தடுக்க இலவச விலை உயர்ந்த ஊசி தயார்- தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு

Published On 2022-01-08 09:32 GMT   |   Update On 2022-01-08 09:32 GMT
திருப்பதி கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது.
திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் மாரடைப்பு மூலம் இறப்பு ஏற்படுவதை தடுக்க திருப்பதியில் உள்ள ரூயா ஆஸ்பத்திரியின்கீழ் டெனெக்டேஸ் பிளஸ் ஊசி மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி இந்த மருந்தை வெளியிட்டார்.

திருப்பதி கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது.

இதற்காக திருமலையில் அப்போல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளால் மாரடைப்பு ஏற்பட்டால் இந்த ஊசி மூலம் உடனடி பாதுகாப்பு கிடைக்கும்.

தென் இந்தியாவில் ரூயா மருத்துவமனை மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. திருப்பதி சுற்றியுள்ள 13 இடங்களில் இந்த ஊசி போடப்படும்.

சந்தையில் இதன் விலை ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் மக்களின் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் பொருட்டு தேவஸ்தனம் இந்த ஊசியை மருத்துவமனையில் இலவசமாக செலுத்தும்.

மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகும்.

இதற்குள் இதய தசையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடனடியாக மருந்து கொடுத்தால் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள உறைவு கரைந்து ரத்த ஓட்டம் சீராகும் என்றார்.
Tags:    

Similar News