லைஃப்ஸ்டைல்
சூப்பரான தர்பூசணி அல்வா

சூப்பரான தர்பூசணி அல்வா

Published On 2020-07-10 10:32 GMT   |   Update On 2020-07-10 15:16 GMT
தர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தர்பூசணி பழத்தை வைத்து சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி பழம்(சிறியது) - 1
வெல்லம் - அரை கிலோ
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
நெய் - 50 கிராம்,
முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு



செய்முறை:

முந்திரியை நெய் விட்டு வறுத்து வைக்கவும்.

தர்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம் வந்ததும், தர்பூசணி கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து வேகவிடவும்.

இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கொட்டி பரவலாக வைக்கவும், ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும்.

தர்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News