தொழில்நுட்பச் செய்திகள்
ஸ்விகி, ஜொமேட்டோ

உணவகங்களை மிரட்டும் ஜொமேட்டோ, ஸ்விகி நிறுவனங்கள்- விசாரணை நடத்த உத்தரவு

Published On 2022-04-05 08:46 GMT   |   Update On 2022-04-05 08:46 GMT
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஜொமேட்டோ மற்றும் ஸ்விகி மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை தேசிய உணவக சங்கம் வைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஸ்விக்கி, ஜோமெட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

மக்கள் கடைகளுக்கு செல்லாமல் செயலி மூலமே தாங்கள் விரும்பிய உணவை வாங்கி உண்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஜொமேட்டோ மற்றும் ஸ்விகி மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை தேசிய உணவக சங்கம் வைத்துள்ளது.

இதன்படி ஜொமேட்டோ, ஸ்விகி இரு நிறுவனங்களும் உணவகனங்களை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் கூடுதல் தள்ளுபடி வழங்க வேண்டும் இல்லையென்றால் ஜோமேட்டோ, ஸ்விகி தளங்களில் அந்த உணவகங்களின் பெயர் இடம்பெறாமல் அல்லது இறுதியில் இடம்பெறும்படி செய்துவிடுவோம் என மிரட்டுவதாக கூறப்படுகிறது.

தங்கள் செயலியை வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் தள்ளுபடி வழங்ககோரி உணவகங்களை மிரட்டுவதாகவும், இவ்வாறு குறைந்த விலைக்கு விற்கும்போது லாபம் வருவதில்லை என்றும் உணவக சங்கம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர உணவகங்கள் விலையை குறைத்தாலும் தங்களுக்கான டெலிவரி சார்ஜை இரு செயலிகளும் குறைப்பதில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டையடுத்து இரு நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News