செய்திகள்
அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நலப்பிரிவு.

அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் நலப்பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு

Published On 2021-09-15 08:06 GMT   |   Update On 2021-09-15 08:06 GMT
சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை நடவடிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
திருப்பூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-
கொரோனா பாதிப்பு நீங்கி விட்டதாக யாரும் நினைத்துவிடக்கூடாது. வீட்டில் இருந்து வெளியே வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஓட்டல்களில் பணியாற்றும் அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை நடவடிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். குழந்தைகள் நலப்பிரிவுகள், போதிய மருந்து, மாத்திரைகளுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாது, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி  சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News